மதுரை காளவாசல் அருகே வைகை ஆற்று பாலத்திலிருந்து கீழே குதித்த நபர் – அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை காளவாசல் அருகே வைகை ஆற்று பாலத்திலிருந்து ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க கண்ணன் என்பவர் கீழே குதித்துள்ளார்.,வைகை ஆற்றின் இருபுறமும் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இரும்பு கம்பிகள் மீது விழுந்ததால் பலத்த காயமடைந்துள்ளார்.,

அக்கம் பக்கத்தினா அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மதுரை தீயணைப்புத் துறையினர்  சுமார் அரை மணி நேரம் இரும்பு அறுக்கும் இயந்திரம் கொண்டு காங்கிரட் கம்பி உடன் அவரை  108 வாகனத்தில் கண்ணனை மீட்டு அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது வேறு ஏதும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இதுகுறித்து கரிமேடு காவல்துறையினர் விசரணை செய்து வருகின்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image