4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஒபுளாபடித்துறை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்!

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 5 நாடு தழுவிய அளவில் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பாபரி மஸ்ஜிதை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்பது உலகளவில் இந்தியர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்பதால், மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியிறுத்தியும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி அங்கு நடக்கும் அத்துமீறலை நிறுத்த வேண்டும், இணையம் தொலைத்தொடர்பு தடையை நீக்க வேண்டும், சிறையிலடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், சிவில் பிரச்சினையை கிரிமினல் குற்றமாக்கி, முஸ்லிம் ஆண்களை சிறைப்படுத்தும் சிறுபான்மை மக்கள் விரோத முத்தலாக் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்கிட வலியுறுத்தியும்.  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நாடு தழுவிய அளவில் இந்த அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image