பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்ஸி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர் முட்டி போட்டு ஊர்வலமாக சென்று நூதன ஆர்ப்பாட்டம்

கோவியேட் காலத்தில் கலாவதியான வாகனங்களின் உரிமங்களை புதுபிக்க அரசு காலத்தை நீட்டித்து தரவேண்டும், வாகனக் கடன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வட்டியை ரத்து செய்யவேண்டும், இ. பாஸ் முறையை அரசு அகற்ற வேண்டும். டாக்ஸி ஓட்டுநர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு தடுக்க வேண்டும், எப்.சி. எடுக்கும் முறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முட்டி போட்டு ஊர்ந்தவாறு காந்தி மியூசியத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை சென்று நூதனமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள் நூதன போராட்டம் நடப்பதை வேடிக்கை பார்த்தவாறு சென்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image