இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி..

மதுரை சிம்மக்கல் மணி நகரம் பகுதியை சேர்ந்த முருகேசன்-ஆவுடை தேவி தம்பதியினரின் மகள் பூரண சுந்தரி. 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியயதால் பார்வையை இழந்த பூரண சுந்தரி தன்னம்பிக்கையை சற்றும் இழக்காமல் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 10ம் வகுப்பில் 471 மதிப்பெண் பெற்றும், 12 ம் வகுப்பில் 1092 மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்துள்ள இவர் இளங்களை இலக்கியம் (ஆங்கிலம்) பயின்றுள்ளார்.தந்தை மார்க்கெட்டிங் பணி செய்து பல்வேறு பொருளாதார நெருக்கடியில் தன்னை படிக்க வைத்த வறுமையை எண்ணி தான் சிறந்த முறையில் பணி செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்டு கடந்த 2016 முதல் குரூப் தேர்வு, வங்கி போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை எழுதி பல தேர்வுகளில் தோல்வியை தழுவினாலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல் 4வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வு எழுதி 296 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது பெற்றுள்ள வெற்றி மாணவி பூர்ண சுந்தரிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.

தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்தாக கூறும் பூர்ண சுந்தரி அதே நேரத்தில் தனது பெற்றோர் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் உறுதுனையாகவும், ஊக்கமும் அளித்து அவர்கள் சொன்ன விஷங்களை முறையாக ஏற்று படித்ததால் மட்டுமே தன்னால் வெற்றி பெற முடிந்தது எனவும் போட்டி தேர்விற்காக தான் தனியாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்ற போது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் சிலர் செய்த பொருளாதார உதவியும் மறக்க முடியாத ஒன்றாக தன்னுள் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறும் பூர்ண சுந்தரி சிறு வயது முதல் தனது அம்மா சொல்லி தரும் பாடங்களை கற்று வந்த தமக்கு போட்டி தேர்வுகளிலும் தனது அம்மா கற்றுக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தனது தாய் ஆசிரியராக இருந்து தமக்கு உறுதுணையாக இறந்ததாகவும் கூறுகிறார். பல தோல்விகளை சந்திக்கும் போது நம்மால் முடியாது என்ற மன சோர்வினை தன்னுடன் இருந்த பெற்றோர் மற்றும் நண்பர்கள் போக்கி தன்னம்பியை ஏற்படுத்தியதாக கூறுகிறார். மேலும் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொண்டதாகவும் தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்ற எண்ணமே வராத அளவிற்கு தனது பெற்றோர் தன்னை பார்த்துக்கொண்டாதாகவும் கூறுகிறார்.

ஒரு குடியுரிமை ஆட்சிப்பணியில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதனை எதிற்கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் பாலமாக இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவ உள்ளதாக கூறுகிறார். மேலும் தன்னை போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் எடுக்கும் முயற்சியை எந்த நிலையிலும் கைவிடாமல் தொடர்ந்தால் நிச்சயம் முயற்சி கை கொடுக்கும் என்ற நம்பிக்கை விதையை விதைக்கிறார் பூர்ண சுந்தரி….

சிறுவயது முதல் படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட தனது மகளுக்கு உறுதுணையாக இருந்து பாடம் கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை செய்து வந்ததாக கூறும் அவரது தாய் ஆவுடை தேவி ஆட்சிபணியில் தங்களை போன்ற கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு என்பதே தங்களது ஆசை என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவரது தாய்…அவருடைய அம்மா ஆவுடை தேவி கூறும்பொழுது தந்தையாக இருந்து தான் செய்த கடமைக்கு கிடைத்த பலனாக இதனை பார்ப்பதாக கூறும் அவரது தந்தை முருகேசன் தனது மகளின் வெற்றி தங்களுக்கு பெருமையை தேடி கொடுத்துள்ளதாகவும் தங்களது வாழ்வில் பெற்ற கஷ்டங்களை தனது மகள் நன்கு உணர்ந்துள்ளதால் கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு உதவ தனது மகள் தயாராக உள்ளதாகவும் தாங்கள் படும் கஷ்டத்தை எண்ணி தனது மகள் செலுத்திய கடினமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றியை எண்ணி ஆனந்த கண்ணீரை விடுகிறார் தந்தை முருகேசன் தன் மகளை போன்று மாற்றுத்திறனாளிகள் ,இதுபோன்ற வெற்றிகளை பெற வேண்டும் என்பதே தனது ஆசையாக உள்ளதாக கூறுகிறார்…அவரது தந்தை முருகேசன் கூறும் போது சாதிப்பதற்கு மாற்றுத்திறன் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மன உறுதியுடன் நான்கு ஆண்டுகளாக போராடி வெற்றியை பெற்று ஆட்சிப் பணிக்கு தேர்வாகியுள்ள இவர் தன்னம்பிக்கைக்கு முன் உதாரணமாக உள்ளார்……

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image