மதுரையில் கொரோனாவால் இறந்தவர்களின் இரண்டு உடல்களை அடக்கம் செய்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் மிக உன்னத மனித நேய பணியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் இறப்பவர்களை அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப முறையான மரியாதையுடன் அடக்கம் செய்து வருகின்றனர். கொரானா பாதிப்பால் இறந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த 55 வயது பெண் உட்பட ஆகஸ்ட் 4, இன்று அதிகாலை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்கள்.

இறந்தவர்களின் உறவினர்கள்எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடல்களை அடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க.மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் ,மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, வடக்கு தொகுதி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புதூர் ஹமீது, ஆகியோரின் ஒருங்கிணைப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை கொரோனா உதவி பணிக்குழு தன்னார்வ தொண்டு செயல்வீரர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அவரவர் மத அடிப்படையை பின்பற்றி தொழுகை நடத்தி மதுரை புதூர் சங்கர் நகர் அடக்கஸ்தலத்தில் கண்ணியமான முறையில் அரசின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image