தொடர் மணல் கொள்ளை.. கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்… விழும் அபாயத்தின் உயர்மின் அழுத்த கம்பிகள்..

மதுரை மாவட்டம் விளாச்சேரி முனியாண்டி புரம். மாடக்குளம் செல்லும் சாலையில் கபாலி அம்மன் கோவில் மலையின் கீழே தினசரி இரவு நேரங்களில் ஜேசிபி எந்திரம் கொண்டு மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால் வருவாய் துறை மற்றும் வனத்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் மணல் எடுக்கப்பட்டு வரும்  பகுதி வனத்துறைக்கு சொந்தமான இடம் எனவும், இந்த பகுதியில் அதிக அளவில் முயல் மற்றும் மயில்கள் வாழ்ந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது இதை ஒன்றைக்கூட காணவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த மின் கோபுரம் ஒன்று தொடர்ந்து மண் எடுப்பதால், மண்சரிவு ஏற்பட்டு மின்கோபுரம் கீழே விழும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

தினசரி நடக்கும் இந்த  மணல் கொள்ளையை அரசு நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் நீர்வளமும் அடியோடு பாதித்து விட்டது என மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆயிரம் சட்டங்கள் போட்டாலும் அதிகாரிகள் கண்டிப்புடன் சட்டங்களை நடைமுறைபடுத்திறால் மட்டுமே இது போன்ற குற்றங்களை தவிர்க்க முடியும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image