அயன்பாப்பாக்குடி கண்மாயில் வரத்து நீர்நிலைகளை சீரமைக்கும் பணியை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

தமிழகமெங்கும் குளங்கள் தூர்வாருதல் மற்றும் நீர்நிலைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களால் துவக்கி வைக்கப்பட்டுவருகின்றனர். அதன்படி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் – தாலுகா அவனியாபுரம் சாலையில் அமைந்துள்ள அயன்பாப்பாக்குடி கண்மாயில் 7கோடியே 13லட்சம் செலவில், கண்மாய் வரத்து நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜாசெல்லப்பா துவக்கி வைத்தார்.

பேட்டி :
தமிழகம் முழுவதும் முதல்வரின் ஆணைக்கிணங்க குடிமராத்து பணிகள் வெற்றியடைவதை போல கண்மாய்கள் நீர்வரத்து கால்வாய்களை முறைப்படுத்தும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி அவனியாபுரத்தில் அமைந்துள்ள அயன்பாப்பாக்குடி வரத்து கால்வாய் 2000 மீட்டர் நீளத்திற்கு சுத்தப்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்த சுத்தப்படுத்தும் பணியினால், நேரடியாக 248 ஏக்கர் நிலத்திற்கும் மறைமுகமாக 2142 ஏக்கர் நிலங்களுக்கும் பயன்படும் வகையில் சீரமைக்கப்படவுள்ளது. முட்புதர்களால் பாழடைந்த இந்த கண்மாயை முதல்வர் உத்தரவினை 7 கோடியே 13 லட்சம் சார்பில் பொறியாளர்கள் மற்றும் இணை பொறியாளர்களால் சிறப்பாக சீரமைக்க பட உள்ளது.! இத்தகைய சிறப்பான திட்டத்தால் தமிழக அரசுக்கு முத்திரை பாதிக்கும் சாதனையாக அமைந்துள்ளது.

ஆகஸ்ட் 6ம் தேதி முதல்வர் மதுரை வருவதை குறித்த கேள்விக்கு:
மதுரையில் வைரஸ்-ன் தாக்கம் குறைந்து வருவதை கடந்த இரு ஆகஸ்ட் 6ம் தேதி முதல்வர் மதுரை வருவதை குறித்த கேள்விக்கு:
மதுரையில் வைரஸ்-ன் தாக்கம் குறைந்து வருவதை கடந்த இரு தினங்களாக பார்த்து வருகிறோம்.! முதல்வரின் ஆய்வுக்கு பின், அலுவர்களும் பொதுமக்களும் இணைந்து இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் வெற்றி காண்பார்கள். மதுரைக்கு வரும் முதல்வர் ஏதேனும் குறிப்பிட்ட கொரோனா கேர் சென்ட்டரை பார்வையிட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image