சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்தில் சொத்து முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு‌-மீட்பு குழுவினர் தகவல்…

தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட ‌‌‌திருநெல்வேலி திருமண்டலத்தில் 2017 ல் நடந்த தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் மகாதேவன் திருமண்டலத்தை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பால்வசந்தகுமார் மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினருமான ஜோதிமணி ஆகியோரை நியமித்து தீர்ப்பளித்தார்.அதன்படி திருநெல்வேலி திருமண்டல நிர்வாகம் மற்றும் கடந்த 3 வருடங்களாக திருமண்டலத்தில் நடந்தள முறைகேடுகள்,  கல்வி நிறுவனங்களில் நடந்த முறைகேடுகள், திருமண்டல சொத்து தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரித்து வருகின்றனர். முறைகேடுகள் குறித்து திருச்சபை மக்கள் ஏராளமாக புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.இதில் திருமண்டல சொத்துகளில் அதிகமான ‌‌‌முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததை தொடர்ந்தும் கரிசலை சேர்ந்த சாலமோன் டேவிட் என்பவர் ஆதாரங்களுடன்  நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளிடம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ புகார் தெரிவித்தார்.புகார்களின் அடிப்படையில் மாவட்ட ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரத்தினராஜ் தலைமையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன், ஒய்வு பெற்ற ஏடிஎஸ்பி  ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு‌ அமைக்கப்பட்டு சொத்து முறைகேடு தொடர்பான விசாரணைகளை துவங்கியுள்ளது.இந்நிலையில் நேற்று ‌‌‌திருநெல்வேலியில் செய்தியாளர்களை  சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல மீட்பு குழுவினர் சிஎஸ்ஐ சினாட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கமிட்டி உறுப்பினர் புஷ்பராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் சாமுவேல் பாஸ்கர் ஜோயல் ஹென்றி, மற்றும் சாலமோன் டேவிட்  ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2017 மே மாதம் முதல் திருநெல்வேலி திருமண்டலத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. கல்வி நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கான கையிருப்பு மற்றும் டெபாசிட் பணங்கள், முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள் கட்டியதிலும் பொருட்கள் வாங்கியதிலும் பெருமளவில் பணங்கள் முறைகேடாக வழங்கப்பட்டன. பல சேகரங்களில் சேகர பொருளாளர் மற்றும் கமிட்டி ஓப்புதல் இல்லாமலும் பல கோடி பணங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களில் பணிகளுக்காக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படாமல் பல லட்சங்கள் வீதம் பல கோடிக்கணக்கான பணங்கள் பெறப்பட்டு பணி வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. திருமண்டல மூலசட்ட விதிக்கு மாறாக சொத்து பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இது குறித்து திருச்சபை மக்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் ‌‌‌புகார் மனு அளிக்கலாம் என தெரிவித்தனர்.அப்போது திருமண்டல மீட்பு குழு நிர்வாகிகள், ஜெகன், எபனேசர், மோகன், சுரேஷ்குமார், செல்வகுமார், அழகுராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இப்புகார் திருநெல்வேலி திருமண்டல‌ மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image