தொற்று பரவாமல் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு .

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று வரை 71185 மாதிரிகள் எடுக்கப்பட்டு 67436 முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதில் 3347 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு 2234 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் 41 சோதனை சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து அரசு ஊழியர்களும் நோய் தடுப்பு பணிகளில் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.அதனை பற்றியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. உடன் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி,மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் சுகாதார துறை கலந்துகொண்டனர்.

செங்கம் செய்தியாளர், சரவணக்குமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image