10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி-வீ.கே.புதூர் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு..

வீரகேரளம்புதூர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.அரசின் வழிகாட்டலின் படி தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பள்ளியின் நிர்வாகி குமார் பாண்டியன் தலைமை வகித்தார்.வீரகேரளம்புதூர் காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image