தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பாதுகாப்பினை ஊறுதிபடுத்தவும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைப்பெற்றது.குத்தாலம் ஊராட்சி ஓன்றியம் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் வட்டார தலைவர் R.வெங்கட கிருஷ்ணன், மாவட்ட தனிக்கையாளார் S.மனோகரன், வட்ட செயலாளர் M.நடராசன், வட்டப் பொருளாளர் M.சங்கர், அரசு ஊழியர் சங்க வட்ட இனைச்செயலாளர் கமலதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் அடுத்த கட்டமாக வெளிநடப்பு, கருப்பு பட்டை அணிந்து மாவட்ட தலைநகர் ஆர்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளனர்.

இரா. யோகுதாஸ்,
மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image