செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் கரியமங்கலம் பகுதியில் கடந்த வாரம் மளிகை கடை மற்றும் மின்சார துறை அலுவலக பூட்டை உடைத்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக செங்கம் காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டிருந்தது. புகார் கொடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தையும் முறையால் பகுதியில் இயங்கிவரும் நியூ சென்னை ரெஸ்டாரன்ட் பேக்கரியில் கல்லாப் பெட்டியை திறந்துபணத்தை கொள்ளையடித்து சென்ற நிகழ்வு அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை செங்கம் காவல் துறையினர் கண்காணித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களின் உத்தரவின் பேரில்செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர் .அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான அவர்கள் வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் சக்திவேல் அஜய் ராஜேஷ் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் வலையாம்பட்டு பகுதிக்குச் சென்ற போலீசார் நால்வரின் வீட்டையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அப்போது ராஜேஷ் மற்ற மூன்று நபர்களை கைது செய்வதை கண்டு தலைமறைவாகியுள்ளார். மூன்று நபர்களையும் விசாரணைக்காக செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர் கொள்ளையடிக்க பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கொலை நடந்து சுமார் 24 மணி நேரத்திற்குள் செங்கம் காவல்துறையினர் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கம் பகுதியில் 24 மணி நேரத்தில் கொலை குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த சம்பவம் இதுவே முதல் முறையாகும். இச்சம்பவத்தால் செங்கம் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image