ரயில் விபத்தில் கால்பகுதி செயலிழந்து தவித்த சென்னை இளைஞருக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி வழங்கிய தனியார் அறக்கட்டளை பாராட்டுகள் குவிந்து வருகிறது….

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த இளைஞர் சசிகுமார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் சிக்கி, இடுப்புக்கு கீழே எந்த பாகமும் செயல்படாத நிலையில், வீட்டிலேயே வறுமையில் முடங்கி கிடந்தார்.அது குறித்து செய்தி அறிந்தவுடன் அன்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் அந்த இளைஞனுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, அவருக்கு தெரிந்த கிராபிஃக்ஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய கணினி ஒன்றை சுமார் 40 ஆயிரம் ரூபாயில் வழங்கியிருக்கிறார்.கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக வீட்டில் முடங்கியிருந்த சசிகுமார் என்ற அந்த இளைஞர் திருமணமான 15-வது நாளில் நடந்த கோர விபத்தில், முற்றிலுமாக இடுப்பு பகுதிக்கு கீழே உள்ள பாகங்கள் செயலிழந்து போக, அவரையே நம்பிவந்த மனைவியையும் தாயையும் காப்பாற்ற முடியாத நிலை இருந்துவந்தது.தற்போது தனியார் அறக்கட்டளை மூலம் அவருக்கு கிடைத்த உதவியால் மீண்டும் தன்னம்பிக்கை பெற்றிருப்பதாக சசிகுமாரும் அவரது குடும்பமும் அன்பு அறக்கட்டளை தலைவர் கொ.அன்புகுமாருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை செய்தியாளர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image