மிரட்டும் கொரொனா மீள உதவும் மூச்சுப்பயிற்சி…

மிரட்டும் கொரொனா மீள உதவும் மூச்சுப்பயிற்சி வகுப்பானது திருச்சி, சண்முகா நகரில் உள்ள இனியன் கார்டன் நலச் சங்கத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இனியன் கார்டன் நலச்சங்க தலைவர் ஷேக் முகமது அலி தலைமை வகித்தார். அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ஆயுஷ் அமைச்சகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் ஹோமியோபதியில் ஆர்சனிக் ஆல்பம் 30 சி போன்ற மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.

மேலும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி, தனிமனித சுகாதாரம், சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்டவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்.சத்தான சமச்சீரான காய்கறி, கீரைகள், பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட உணவுகளை உண்ண வேண்டும். வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஏ மற்றும் ஜிங்க் புரதம், இரும்புச்சத்து, ஒமேகா-3 நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களில் உடல் பருமன் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரகம் அல்லது கல்லீரல் குறைபாடு கொண்டவர்கள் புற்றுநோயாளிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு நோய்தொற்று பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையோடு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். புகை பிடித்தல், மது குடித்தல் அறவே கூடாது. சமூக ஊடகங்களில் வரும் ஆதாரமில்லாத செய்திகளையும், வதந்திகளையும் நம்பக்கூடாது. மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மிரட்டும் கொரொனிவிலிருந்து மீள மூச்சுப்பயிற்சி வழிவகை ஏற்படுத்தும்.தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் குடிநீர் அறிந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு சமதளமான நிலப்பரப்பில் காற்றோட்டமான இடத்தில் தரை விரிப்பின் மீது அமர்ந்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தினமும் ஆழ்ந்த உள் மூச்சு, வெளி மூச்சு பயிற்சிகளை அனைவரும் செய்யலாம். அனுலோம விலோம பிராணாயாமம், சந்திர அனுலோம விலோம பிராணாயாமம்,, சூரிய அனுலோம விலோமா பிராணாயாமம், சந்திர பேதனா, சூரிய பேதனா, நாடிசுத்தி உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும், மன அமைதிக்கு தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இனியன் கார்டன் நலச்சங்க செயலாளர் மரிய ஜோசப், பொருளாளர் அண்ணாதுரை, துணைத் தலைவர் முஸ்தபா, துணைச் செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image