அலங்காநல்லூர் அருகே அய்யூர் ஊராட்சியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய விவசாயி ஜெயராஜ் அமிர்தம் தம்பதியர்.. பாராட்டும் பொதுமக்கள்..

மதுரை அலங்காநல்லூர் அருகே அய்யூர் ஊராட்சியில் சுமார் 600 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய விவசாயி ஜெயராஜ் அமிர்தம் தம்பதியர்னரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் சுமார் 600 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ் அமிர்தம் தம்பதியர் தனது சொந்த கிராம மக்களுக்கு கொரோனா பேரிடர் கால நிவாரணமாக இதை வழங்கினர். கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வந்து பொருட்களை பெற்றுச் சென்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமப்பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் விவசாயி செல்வராஜ் தனது கிராம மக்களுக்காக வழங்கிய இந்த நிவாரண உதவிக்கு பொதுமக்கள் மனதார நன்றியினை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image