கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்..

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல் நிகழ்வு இன்று  9.7.2020 பிசா பேக்கரி அருகில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு வழங்கியதுடன் கபசுர குடிநீர், இலவச முககவசம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுநகர் செயலாளர் பாசித் இலியாஸ் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த நிகழ்வை காவல் துறை சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன்  தொடங்கி வைத்து முக கவசம், சோப்புகள் மற்றும் கபசுர குடிநீரை பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை அமைப்பாளர் திரு பஞ்சநாதன், தொகுதி செயலாளர் அற்புத குமார், நகர் பொருளாளர் ஹிதாயத்துல்லா, துணை செயலாளர் நூர்தீன் பாதுஷா  மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நகர அமைப்பாளர் தாரிக் துணை அமைப்பாளர் கருஞ்சிறுத்தை ஹபீப், மாணவர் அணி அமைப்பாளர் விடுதலை முஸ்தாக் செய்யது பாய், ரமீஸ்கான் ஆகியோருடன். சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்க தலைவர் மூர் டிராவல்ஸ் ஹசனுதீன் கலந்து கொண்டார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image