நிலக்கோட்டையில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியருக்கு உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி கிளை காசாளராக பணியாற்றும் ஒருவர் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தானாக முன்வந்து கொரணா பரிசோதனை மேற்கொண்டார்.அவருக்கு கொரானா தொற்று இருப்பது தெரியவந்தது அடிப்படையில் அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி கிளை உடனடியாக கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
மற்றும் அங்குள்ள பணியாளர்களுக்கு சம்பந்தமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகளை மூடப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை நிருபர் ம.ராஜா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image