மதுரையில் வீட்டு வாசலில் அடிக்கடி சத்தம் போட்டதால்.. பசுவை கொடூரமாக தாக்கிய உரிமையாளர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!..

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து கனி, இவர் அதே பகுதியில் சொந்தமாக பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த பசுமாடு ஒன்று நீண்ட நேரமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர் முத்துகனி அங்கிருந்த கட்டையால் எடுத்து பசு மாட்டினை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததுள்ளது, இந்த காட்சிகள் அனைத்தும் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது, அக்காட்சிகள்  வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து சம்பவத்தில் சென்ற காவல்துறையினர் மாட்டின் உரிமையாளர் முத்து கனியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், படுகாயமடைந்த பசுமாட்டிற்கு உரிய சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவருக்கு பரிந்துரை செய்துள்ளனர், வீட்டு வாசலில் சத்தம் போட்ட குற்றத்திற்காக பசு மாட்டினை கொடூரமாக தாக்கிய சம்பவம் கால்நடை ஆர்வலர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..