அம்பை அருகே ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-சுகாதார பணிகள் தீவிரம்..

கல்லிடைக்குறிச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தடுப்பு மற்றும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவிற்குட்பட்ட கல்லிடைக்குறிச்சி கீழ் முக நாடார் தெருவில் வசித்து வரும் தந்தை (46), மகள் (18), மகன் (14) ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல், இருமல் இருந்துள்ளது.கல்லிடைக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது அவர்களது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டது. நேற்று அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முருககுகன், சுகாதார ஆய்வாளர்கள் ரத்னவேல், கண்ணன்மகராஜன் ஆகிய சுகாதார துறையினர் அவர்களை 108 அவசர ஊர்தியில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அந்த பகுதி தனிமை படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்தால் தடுப்பு நடவடிக்கை எடுத்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image