உசிலம்பட்டியில் ஊரடங்கினால் மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால் மருந்துகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் தளர்வற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.இதனால் உசிலம்பட்டியின் முக்கியச் சாலைகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

அத்யாவசிய கடைகளான மருந்துக்கடை பால் ஆகியவற்றிற்கு அரசு ஊரடங்கில் விலக்கு அளித்த போதும் உசிலம்பட்;;டி பகுதியில் மருந்துக்கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.உசிலம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏற்ப்பட்ட பருவநிலை மாற்றத்தினால் பொதுமக்கள் காய்ச்சல் சளி தலைவலி போன்ற வியாதிகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் மருந்து வாங்க எந்த மருந்துக் கடையும் இல்லாததால் மருந்து மாத்திரை வாங்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர்.மருந்துக் கடைகள் திறக்காதது குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்ட பொழுது அடைக்கச் சொல்லி தாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் அவர்களாக முன் வந்து கடைகளை அடைத்திருக்கலாம் எனக்கூறினர்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image