சிவகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

தென்காசி மாவட்டம் சிவகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பயணப்படி, சரண்டர், பழைய ஓய்வூதியம், கொரோனா நோய் தடுப்பு பணி சிறப்பு ஊதியம் மற்றும் அரசு ஊழியர் கொரோனா நோயின் காரணமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கல், வாரிசு வேலை உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரி வட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம நடைபெற்றது.

சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன் பட்டாணி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பு வட்ட செயலாளர் மாடசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சுகாதாரத்துறை ராஜ் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் துணை தாசில்தார்கள் கருப்பசாமி, சரவணன், சாலைப்பணியாளர்கள், கருவூலத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை,, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image