இராஜபாளையம் அருகே கொரோனா தொற்றுக்கு காவலர் உயிரிழப்பு மாவட்டத்தில் முதல் காவலர் உயிரிழப்பால் என்பதால் காவல்துறையினர் அச்சம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக கலங்கா பேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் (வயது 42) பணியாற்றிவருகிறார் இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது.

இந்நிலையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருந்தார், இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு இரண்டாம் தேதி அனுப்பிவைக்கபட்டனர் இந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று முதல் காவலர் உயிரிழப்பு உயிரிழ்ந்த காவலர் அய்யனாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் முதல் பெண் குழந்தை 6ம் வகுப்பும் இரண்டாவது ஆண் குழந்தை 3ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இவர் பணியாற்றிய சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு காவலர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து தான் பணியாற்றி வருகின்றனர், காவலர் இறப்பு இராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து காவலர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image