செங்கம் அருகே சிறுமியை கடத்தி திருமணம்: போக்சோவில் டிரைவர் கைது.

செங்கம் அருகே சிறுமியை கடத்திu திருமணம் செய்த டிரைவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பு மாயமானார். தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அதில், தானிப்பாடி அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பால் டிரைவர் முனீஸ்வரன், 23, சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, முனீஸ்வரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image