ரோட்டரி மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மரக்கன்று நடும் திட்டம் தொடக்க விழா …

lகன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் 3212ல் 104 ரோட்டரி சங்கங்கள், 4,464 ரோட்டரி உறுப்பினர்கள் உள்ளனர். ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்று ஓராண்டிற்கான சேவைகளை செய்துவருகின்றனர்.

இந்த ஆண்டு ரோட்டரி இன்டர்நேஷனல் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை பிரதான நோக்கமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 104 ரோட்டரி சங்கங்களிலும் இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடந்த ராமநாதபுரம் ரோட்டரி சங்க நிகழ்வில்  புதிதாக பொறுப்பு ஏற்ற ரோட்டரி ஆளுநர் முருகதாஸ் மரக்கன்றுகளை நட்டு வைத்து  ரோட்டரி மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஓராண்டு செயல் திட்டங்களை தொடங்கி வைத்தார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார்.

இராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தலைவர் கீதா ரமேஷ் தலைமையில் மரம் ஓர் வரம் என்ற தலைப்பில் டாக்டர் அப்துல் கலாம் பற்றாளர் மாணாக்கரின் ஆலோசகர் நகைச்சுவை நடிகர் தாமு விழிப்புணர்வு உரையாற்றினர்.
இந்நிகழ்வில் அப்துல் கலாம் அறக்கட்டளை இணை நிறுவனர் ஏபிஜேஎம்ஜெ ஷேக் சலீம், துணை ஆளுநர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி இயக்க சேவை சிறப்பை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல இது போன்ற சேவை திட்டங்கள் 2020 ஜூலை முதல் 2021 ஜூன் வரை செயல்படுத்த உள்ளதாக  ரோட்டரி பப்ளிக் இமேஜ் குழு மாவட்ட சேர்மன் ஆ.சண்முக ராஜேஸ்வரன், தெரிவித்தார்.

இன்று (01/07/2020) நடந்த காணொளி நிகழ்வில் சென்னை, காரைக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர். காணொளி நிகழ்வை முனைவர் கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க  செயலர் பார்த்திபன் நன்றி கூறினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image