பெட்ரோல்,டீசல் விலை உயர்வு-மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து பிற பொருட்களின் விலைகளும் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரியும், இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பொது மக்களை நேரடியாக பாதிக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் ஸ்டேட் பாங்க், பெட்ரோல் பங்குகள், மற்றும் முக்கிய இடங்களில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் எஸ்ஆர் பால்த்துரை, நகர தலைவர் எஸ்கேடி ஜெயபால், மாவட்ட துணை தலைவர் பால் எ சண்முகவேல், தெய்வேந்திரன், ஊடக பிரிவு சிங்கராஜ், அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் பிரபாகர், டயர் செல்வம், மேலநீலிதநல்லூர் வட்டார தலைவர் முருகையா, முன்னாள் கவுன்சிலர்கள் அருணாசலக்கனி, செல்வன், மணிகண்டன், இலக்கிய பிரிவு கந்தையா, மோகன் ராஜ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image