மதுரை சலூன் கடைக்காரரின் மகளுக்கு அமைச்சர் ஆர்பி – மதுரை கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டு

 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவித்த ஏழை குடும்பங்களுக்கு மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரரான மோகன் தன் மகளின் எதிர்காலத்திற்கு சேமித்து வைத்த பணத்தை செலவு செய்த சம்பவம் வைரலானது . அதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி , அவர்களின் குடும்பத்தைப் பாராட்டினார் . அதனைத் தொடர்ந்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்பி . உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய் இருவரும் மோகன் அவர்கள் குடும்பத்தை  நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்கள் . மேலும் , மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் நந்தினி ரியல் எஸ்டேட்ஸ் சார்பாக பாராட்டுக் கேடயத்தை அமைச்சர் ஆர்பி உதயகுமார் வழங்கினார் . மேலும் தமிழக அரசு சார்பாக அவர்களின் குடும்பத்தினரை கௌரவப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார் . நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் , சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் , சதர்ன் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர் . மேலும் மதுரை நந்தினி ரியல் எஸ்டேட்ஸ் உரிமையாளர் பிரபு , மாணவியின் எதிர்காலத்திற்காக சுமார் 50 ஆயிரம் இருப்புத் தொகையை அமைச்சர் முன்னிலையில் மாணவி நேத்ராவிடம் ஒப்படைத்தார் . சலூன் கடை மோகன் குடும்பத்தினருக்கு பல்வேறு பாராட்டுகளும் உதவிகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image