ஆயிரம் ரூபாய் மாதாந்திர பாஸ் செல்லுபடியாகும்.கீழை நியூஸ் வேண்டுகோளை ஏற்ற அரசு போக்குவரத்துக் கழகம்

கடந்த மாதம் நமது கீழை நியூஸ் (சத்திய பாதை மாத இதழ்) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்திற்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர பாஸ் எடுத்து வைத்து இருப்பவர்கள் ஒரு கோரிக்கையானது பொதுமக்கள் சார்பாக நாம் வைத்திருந்தோம். அதனை ஏற்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ( மதுரை ) மதுரை மண்டலம் , மதுரை மூலமாக கடந்த மார்ச் மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ரூ .1,000 / – மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்கப்பட்டுள்ளது . மேற்கண்ட பாஸ்கள் 16.03.2020 முதல் 15.04.2020 வரை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது . கொரோனா Covid – 19 தடுப்பு தொடர்பாக கடந்த 25.03.2020 தேதி முதல் தமிழக அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொதுப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது . தற்சமயம் தமிழக அரசு 01.06.2020 முதல் பொது போக்குவரத்து 50 % இயக்கிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரூ . 1000 / – சலுகை கட்டண பாஸினை பொதுமக்கள் 15.06.2020 வரை அனுமதிக்கப்படுகிறது என்பதை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ( மதுரை ) லிட் , மதுரை மண்டலத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பாக அது செல்லுபடியாகும் என தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு முதல் முதலாக செய்தி வெளியிட்ட (சத்திய பாதை மாத இதழ்)கீழை நியூஸ்  தளத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்திற்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image