மதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் அமைச்சர் வழங்கிய பின் பேட்டி..

மதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது,

கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி முதலமைச்சர் உத்தரவுப்படி எளிமையாக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய் வரை கடன் யார் வேண்டுமாலும் வாங்கிக்கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி கடனை பெற்றுக்கொள்ளலாம். திமுக தலைவரின் ஒன்றிணைவோம் திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது. திமுக அளித்த புகார் மனுக்களில் ரேஷன் கடை புகார் சம்ந்தமாகவோ, உணவு கிடைக்கவில்லை என்று எந்த புகார் மனுவும் இல்லை.

பத்து இருபது பேருக்கு உதவி செய்து விட்டு, லட்சக்கணக்கில் உதவியதாக திமுக கூறுவது போல, ஒரு சில மனுக்களை வைத்துக்கொண்டு லட்சணக்கில் புகார் மனுக்கள் பெற்றுள்ளோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் குணம் கோணலாக உள்ளது. தமிழக மக்களிடையே முதலமைச்சர் பேருக்கு மேல் பேர் வாக்குகிறார் என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் குறை கூறுகிறார். இக்கட்டான நேரத்தில் முதலமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் குறை கூறும் ஸ்டாலினை பற்றி மக்கள் தெரிந்து கொள்ளாவார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நியாவில் ஊரடங்கு தோல்வி என்று ராகுல்காந்தி தமிழகத்தின் ஊரடங்கை பற்றி குறிப்பிட்டு பேசியிருக்க மாட்டார், என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image