Home செய்திகள் கோவை மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் கட்டாய வசூல் வேட்டை: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை!

கோவை மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் கட்டாய வசூல் வேட்டை: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை!

by Askar

கோவை மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் கட்டாய வசூல் வேட்டை: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் CITU பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர்,S. பாஷா கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை மனுவின் விபரம் கீழ்க்கண்டவாறு,

கொரோனா தெற்று பரவல் காரணமாக கடந்த 25: 03:2020 முதல் எதிர் வரும் 31:05:2020 வரை ஊரடங்கு தொடர மத்திய மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் ஏழை எளிய தொழிலாளர்கள் பொதுமக்களும் அவர்களில் அன்றாடும் வாழ்க்கையை நடத்த இயலாமல் துன்பத்தில் ஆழ்ந்து வரும் இந்த சூழ்நிலையில்,

இதையொட்டி வங்கிகள் நிதி நிறுவனங்கள் மைக்ரோ ஃபைனான்ஸ் உள்ளிட்ட வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு தவணைகள் வசூலிப்பதை தடைசெய்துமக்கள் சிரமங்களை போக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அரசின் உத்தரவுகளை மதிக்காமல் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் குறிப்பாக ஆக்சிஸ் வங்கி ரெப்கோ வங்கி பஜாஜ் பைனான்ஸ் கிராமவிடியல் வெல்ஸ்டார் சமஸ்தானம் போன்ற பல சுய உதவிக் குழுக்கள் குறிப்பாக பெண்களிடம் உடனடியாக நிலுவை தொகைகளை வட்டியுடன் செலுத்த பொதுமக்களை தொழிலாளர்களையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வற்புறுத்தியும் மிரட்டியும் வருகிறார்கள் இதனால் சுய உதவிக் குழுக்களில் கடன் பெற்ற தொழிலாளர்களும் பொதுமக்களும் மிகுந்த வேதனையில் ஆழ்ந்து வருகிறார்கள்.

பல தனியார் வங்கிகள் அரசு உத்தரவுகளுக்கு எதிராக வங்கி கணக்கிலுள்ள கடன் பெற்றவர்களின் தொகைகளை அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து தன்னிச்சையாக எடுத்தும் விட்டனர்.

எனவே தாங்கள் இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி தொழிலாளர்கள் பொதுமக்கள் நலன் காக்க தேவையான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுக்கு சுய உதவிக் குழுக்களுக்கு ஏழை எளிய பொது மக்களும் தொழிலாளர்களும் பாதிக்காத வண்ணம் உத்தரவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!