ஆய்க்குடி அமர் சேவா சங்கம் சார்பில் 1600 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கல்..

ஆய்க்குடி அமர் சேவா சங்கம் சார்பில் 1600 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் ஆய்குடி அமர் சேவா சங்கத்தில் உள்ள 1600 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மசாலா பொருள்கள் மற்றும் சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி சுரண்டை சுபசுந்தரி மஹாலில் வைத்து நடந்தது. நிகழ்ச்சியில் ஆய்க்குடி அமர் சேவா சங்க துணைத் தலைவரும் சுரண்டை மகாலட்சுமி மருத்துவமனை டாக்டர் கே.முருகையா மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண பொருள்களை வழங்கி துவக்கி வைத்து கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள 1600 மாற்றுத்திறனாளி குடும்பங்களின் வீடுகளுக்கே சென்று ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருள்கள் அமர் சேவா சங்க பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் அமர் சேவா சங்க மறுவாழ்வுத்துறை தலைவர் செல்வராஜ், தலைமை பிசியோதெரபிஸ்ட் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆய்க்குடி அமர்சேவா சங்கம் பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சேவைகள்,உதவிகள், உபகரணங்கள்,கல்வி உதவிகள் தொடர்ந்து அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image