Home செய்திகள் பொது ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி-சமூக விலகல்,கொரோனா தடுப்பு முறைகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்…

பொது ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி-சமூக விலகல்,கொரோனா தடுப்பு முறைகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்…

by Askar

பொது ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி-சமூக விலகல்,கொரோனா தடுப்பு முறைகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்…

பொது ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி ஆணையர் (பொ) மற்றும் சுகாதார அலுவலர் நாராயணன் சமூக விலகல் மற்றும் கொரோனா தடுப்பு முறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் செய்தியில் கூறியுள்ளார்.

அதில்,மத்திய மாநில அரசுகள் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்தும் சில தளர்வுகளும் வழங்கியுள்ளது.

உலகமெங்கும் வைரஸ் தொற்று பரவியபோதும் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி.

மரியாதைக்குரிய நமது மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைக்கிணங்க வட்டாட்சியர் அழகப்ப ராஜா புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல், காவல் ஆய்வாளர் கோவிந்தன், உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், மாரிமுத்து மற்றும் முன்னதாக (பொ) ஆணையராக பணியாற்றிய பொறியாளர் தங்கபாண்டி ஆகியோரின் ஆலோசனையின் படி மூன்று கட்ட ஊரடங்கின் போதும் பொதுமக்கள் ஆட்டோ டக்ஸி ஓட்டுனர்கள் நகர அனைத்து வியாபாரிகள் தன்னார்வலர்கள் வருவாய் துறை, காவல்துறை நகராட்சி தூய்மை பணியாளர்கள் சேர்ந்த கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

நான்காம் கட்ட ஊரடங்கின் போதும் தற்சார்பு அடிப்படையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையாரும் வெளியே வர வேண்டாம்.

பகல் பொழுதில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்,கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் வெளியில் வர வேண்டாம். அவசரத்திற்கும் அத்தியாவசிய திற்காக மட்டும் வெளியே வாருங்கள்.

சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், முகக்கவசம் அணியாமல் வெளியே வருவது தண்டனைக்குரிய குற்றம். கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுங்கள்.

பகல் முழுதும் ஊரடங்கு இல்லை கட்டுப்பாடுகள் தளர்வு என வெளியில் செல்ல வேண்டாம். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகரின் ஏழு இடங்களிலும் தொடர்ந்து காய்கறி விற்பனை தொடர்கிறது.

ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

ஆகவே பொது மக்கள் தனித்திருங்கள், விலகியிருங்கள், விழித்திருங்கள், கொரானா எனும் கொடிய வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதில் நாம் அனைவரும் போர் வீரர்கள் என்பதை நினைவிற்கொள்வோம் என்று ஆணையர் கூறியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!