Home செய்திகள்கீழக்கரை செய்திகள் உயிருக்குப் போராடும் சிறுமியின் உயிர் காக்க சிறப்பு ரத்ததான முகாம்..சமூக நல்லிணக்கத்துக்கு உதாரணம்..

உயிருக்குப் போராடும் சிறுமியின் உயிர் காக்க சிறப்பு ரத்ததான முகாம்..சமூக நல்லிணக்கத்துக்கு உதாரணம்..

by ஆசிரியர்

தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் சிறுமியின் உயிர் காக்க சிறப்பு ரத்ததான முகாம் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நடைபெற்றது. ரம்ஜான் நோன்பு இருந்த இளைஞர்கள்  இரத்த தானம் செய்து சமூக நல்லிணக்க நிகழ்சியாக அமைந்தது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் வில்லாபுரம் புதுநகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சிறப்பு அனுமதியுடன் ரத்ததான முகாம் நடைபெற்றது. நாடெங்கிலும் கொரானா தொற்று தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி என்பவரின் மகள் சிறுமி காவியா (வயது 17) இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இவருக்கு அதிக அளவில் இரத்த தானம் தேவைப்படுவதால் இவரது தந்தை ரவி வில்லாபுரம் புதுநகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர்களிடம் உதவி கேட்டார்.

இதனை தொடர்ந்து சங்க செயலாளர் இப்ராகிம் சுல்தான் சேட் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து சிறப்பு அனுமதி பெற்று இத்த தான முகாம் ஏற்பாடு செய்தார். இதனை தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் 63 பேர் இரத்த தானம் செய்தனர்.

இதில் ரம்ஜான் நோன்பில் இருந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து இரத்த தானம் செய்து சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இருந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!