அப்பாவிகள் மீதான பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவிக்குமாறு வலியுறுத்தி அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடிதம்..

அப்பாவிகள் மீதான பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவிக்குமாறு வலியுறுத்தி அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடிதம்..

இனரீதியான வெறுப்பினால் மத சிறுபான்மையினரை வேட்டையாடும் பா.ஜ.க. அரசு சர்வதேச சமூகத்திடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதால் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கொரோனா பீதியால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயத்தில் ஆழ்ந்திருக்கும்போது கூட வெறுப்பையும், வகுப்புவாதத்தையும் சங்க்பரிவாரம் பரப்புரை செய்து வருகிறது. அவர்களை கட்டவிழ்த்து விடும் அரசு தான் குடியுரிமை பாதுகாப்பு போராட்டங்களை வழி நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டி மாணவர்கள், பத்திரிகையாளர்கள், குடியுரிமை ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத சட்டங்களை சுமத்தி சிறையிலடைக்கிறது.

போராட்டங்களுக்கும், ஒன்று கூடல்களுக்கும் சாத்தியமில்லாத முடக்கப்பட்ட சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி குடிமக்களை மோடி அரசு சிறையில் அடைக்கிறது. அதேவேளையில் வெறுப்பு வைரஸ்களை நாட்டில் பரப்புவதன் மூலம் கலவரத்தை உருவாக்கும் சங்க்பரிவாரத்தை தடையின்றி சுதந்திரமாக நடமாட மோடி அரசு அனுமதி அளித்துள்ளது.

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களின் பெயரால் கைதுகள் தொடரும்போதும் டெல்லி உள்ளிட்ட ஏராளமானவர்களின் மரணத்திற்கு காரணமான இன அழித்தொழிப்பு கலவரங்களுக்கு அழைப்பு விடுத்த சங்க்பரிவார தலைவர்கள் வீதிகளிலும், சமூக வலை தளங்களிலும் வெறுப்பு பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது கொரோனோவை விட பயங்கரமான சமூக சூழலை நாட்டில் உருவாக காரணமாகும்.

ஆகையால் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்தவும், வெறுப்பு பிரச்சாரகர்களான இந்துத்துவ தலைவர்களை கட்டுப்படுத்தவும் நாட்டின் அரசியல், சமூக, குடியுரிமை இயக்கங்கள் துணிச்சலுடன் முன்வரவேண்டும்.

எம்.கே.ஃபைஜி
தேசிய தலைவர்,
எஸ்.டி.பி.ஐ.