சிஷ்யர்கள் குடும்பத்திற்கு குருக்கள் உதவி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஏழை எளிய மாணவர்களின் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.தலைமை ஆசிரியர் மற்றும ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகளை தேர்வு செய்து அவர்களது வீடுகளுக்கு தேவையான அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் குடும்பத்திற்கு தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் ஆசிரியர் நவீன், சுபா ஆசிரியர் பாலசுந்தரம் ஆகியோர் வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்