வங்கி ஏடிஎம் மையங்களால் வைரஸ் தொற்றும் அபாயம்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கைகளை தினமும் 12 தடவை முதல் 15 தடவை சோப் போட்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய தேவைக்காக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க செல்லும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயம் நிலவுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள ஸ்டேட் வங்கி , மெர்க்கண்டைல் வங்க, இந்தியன் ஓவர்சீஸ் , ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் மையங்களில் வைரஸ் தொற்று தடுப்பு தொடர்பாக எந்தவித பாதுகாப்பும் இன்றி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் யாரோ ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் கூட அவர் மூலம் அந்த ஏடிஎம் எந்திரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பரவும்.அத்தியாவசியத் தேவை என்பதால் எந்நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்களை கண்டுகொள்ளவில்லை என்பதை காண முடிகிறது. வங்கி ஊழியர்களும் முகக்கவசம், கையுறை அணிந்து வாடிக்கையாளர்களை ஒரு அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி பணிகளை மேற்கொள்கின்றனர். வங்கி கிளையுடன் செயல்பட்டு வரும் ஒரு சில ஏடிஎம் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு   காவலாளிகள் மூலம் ஏன்?  கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.ஆனால், தனியாக செயல்பட்டு வரும் ஏடிஎம் மையங்களில் இது போன்ற எந்த முன்னேற்பாடுகளும் இல்லை, காவலாளிகளும் இல்லை. அதிலும், பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள ஏடிஎம் மையங்களை பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் தங்களது பாதுகாப்பிற்காக கையிலேயே கிருமி நாசினிகளுடன் வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று நம் நாட்டில் சமுதாய தொற்றாக மாறவில்லை என சுகாதார அமைப்புகள் தெரிவித்திருந்தாலும், இது அடுத்தக்கட்டதிற்கு செல்லாமல் இருப்பது நம் ஒவ்வொருவர் கைகளிலும் தான் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image