அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, 1997).

இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer) ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில் ஜூன்26, 1914ல் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஆவார். இவரது தாயார் பிரம்பேக் எனப்படு பிளாஞ்சிகேரி ஆவார். தந்தைவழி பாட்டியால் இவர் புதுமைப்புனைவாளர் எலி விட்னெவின் உறவினர். ஓகியோ, தொலிடோவில் உள்ள சுகாட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் 1929ல் பிலிப்சு கல்விக்கழகத்தில் பயின்றார். அதன் பிறகு, யேல் கல்லூரியில் சேர்ந்து 1935ல் பை—பீட்டா-கப்பா பட்டம் பெற்றார். அப்போது இவர் மண்டையோடு எலும்பு அமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டூ பயிலும்போது ஆர்த்தர் எடிங்டனாலும் இளைஞர் சுப்பிரமணியன் சந்திரசேகராலும் பெரிதும் கவரப்பட்டுள்ளார். பின் ஐக்கிய அமெரிக்கா பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் 1935ல் கலை முதுவர் பட்டமும், 1938ல் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

சுபிட்சர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் துறைப்புல உறுப்பினராக இருந்தபோது போர்க்கால அறிவியல் பணியாக சோனார் உருவாக்கப் பணியில் ஈடுபட நேர்ந்துள்ளது. இவர் 1946 இல் விண்வெளியில் இயங்கும் தொலைநோக்கிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார். இவர் உடுக்கணங்காணி எனும் மின்மக் கருவியை உருவாக்கினார். நாசாவின் இந்தக் கருவி சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி எனப்படுகிறது. இவர் அறிவியலாளராக, விண்மீன்கள் உருவாக்கம் மின்ம இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1947ல், என்றி நோரிசு இரசலுக்குப் பிறகு பிரின்சுடன் வான்காணக இயக்குநரானார். இதற்கு இவரும் மார்ட்டின் சுவார்சு சைல்டும் கூட்டாக 1970 வரை தலைமையேற்றனர்.

சுபிட்சரும் டொனால்டு மார்ட்டனும் 1965ல் கனடா, நுனாவட் மாவட்டப், பாஃபின் தீவில் அமைந்த ஆயூட்டக் தேசியப் பூங்காவில் உள்ள 1675 மீட்டர் உயரத் தோர் மலையை முதன்முதலாக ஏறிச் சாதனை படைத்தனர். அமெரிக்க ஆல்பைன் குழு உறுப்பினரான சுபிட்சர் “இலைமன் சுபிட்சர் மலையேற்ற முன்னேற்ற விருது” எனும் விருதை உருவாக்கினார். இந்த விருது ஒவ்வோராண்டும் மலையேற்றத்தில் முனைந்து வெற்றியீட்டும் வீரர்களுக்கு 12,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசை வழங்குகிறது. கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம், ஹென்றி ட்ராப்பர் பதக்கம், நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் மற்றும் க்ராப்போர்டு பரிசு ஆகிய பதக்கங்கள் இவரைப் பாராட்டி வழங்கப்பட்டன.
இலைமன் சுட்டிராங் சுபிட்சர் மார்ச் 31, 1997ல் தனது 82வது வயதில் பிரிசிடோன் நியூ ஜெர்சி அமெரிக்காவில் மரணமடைந்தார். பிரின்சுடன் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered