Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுரை காவலரின் நெகிழ வைத்தத செயல்..

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுரை காவலரின் நெகிழ வைத்தத செயல்..

by ஆசிரியர்

இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் Corona தொற்று வை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அசுர வேகத்தில் பரவும் தொற்று நோயை மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..

இதனால்  இன்று மதுரை மாநகரில்  வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் மேட்டுதெருவை சேர்ந்த ஒரு பெண் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அக்கம் பக்கத்தில் ஆட்டோ, கார் என எதுவும் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் பணியில் இருந்த மதுரை தெப்பக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனிடம் பிரசவ வலியால் தனது மருமகள் துடிக்கிறாள் வாகனம் எதுவும் ஓடவில்லை என அப்பெண்ணின் உறவினர் கோரிக்கை வைத்தவுடன்  அப்பகுதிக்கு வந்த ஒரு வாகனத்தை மறித்து அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு இறக்கி விட வேண்டும் என கூறியதோடு தான் வைத்திருந்த பணம்  ௹. 200 ம் அப்பெண்ணின் மாமனார் கையில் கொடுத்தனுப்பினார்.

இந்த காலக்கட்டத்தில் காவலர்கள் இவ்வளவு, பணிச்சுமையில் இருந்த போது இப்படி உதவி செய்வது காக்கிச்சட்டைக்கும் ஈரம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!