கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல் மற்றும் துண்டு பிரசுரங்களை ஒட்டியும் வழங்கியும் அசத்திய சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு G5 காவல்நிலைய அதிகாரிகள்!

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல் மற்றும் துண்டு பிரசுரங்களை ஒட்டியும் வழங்கியும் அசத்திய சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு G5 காவல்நிலைய அதிகாரிகள்!

சென்னை மாநகர காவல்துறையினர் மற்றும் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை இணைந்து கொரோனா வைரஸ் சம்பந்தமாக ஒரு விழிப்புணர்வு பாடலை உருவாக்கி உள்ளனர்.

இந்த பாடல் மக்கள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு G5 காவல் நிலைய ஆய்வாளர் ‘ராஜேஸ்வரி’ அவர்களின் பங்களிப்பு இதில் அதிகளவில் உள்ள காரணமாக மேலதிகாரிகள் அவரை வெகுவாக பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து இன்று காலை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர்’ராஜேஸ்வரி’தலைமையிலான காவல்துறையினர் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகரப் பேருந்துகளில் துண்டு பிரசுரங்களை ஒட்டியும், பிரசுரங்களை பொதுமக்களுக்கும் வழங்கினார்கள். ஆட்டோ மூலமாக விழிப்புணர்வு பாடலை ஒளிபரப்பு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயல்ப்பட்டது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இது போன்ற சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி பணியாற்றி வரும் ஆய்வாளர்’ராஜேஸ்வரி’அவர்களுக்கு பொதுமக்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.