Home செய்திகள் அறிவியல் டெக்னாலஜி அசுர வளர்ச்சி, மக்களுக்கு சொல்வது என்ன…

அறிவியல் டெக்னாலஜி அசுர வளர்ச்சி, மக்களுக்கு சொல்வது என்ன…

by Askar

டெக்னாலஜி எல்லாம் ரொம்ப பாஸ்டா சேஞ்ச் ஆகறதால பெரிய இருக்காம் இளைஞர்களுக்கு . கமல் பத்து வேஷம் போட்ட படத்தை பாத்துருக்கோம். தசாவதாரம். ஆனா, ஒரே லைஃப்ல ஏகப்பட்ட technological changes பாத்த ஒரே generation நாங்கதான்..

இப்போ பொறக்கற பசங்க எல்லாம் பொறக்கும் போதே கையில smartphone -வோடயே பொறக்கறாங்க..

நாங்க பொறக்கும் போது டிவி ஒரு மிகவும் அறிய பொருள். அதுவும் கருப்பு வெள்ளை டிவி. சந்துல ரெண்டு மூணு வீட்டுல தான் இருக்கும். அப்புறம் கலர் டிவி வந்தது. அப்போ கொஞ்சம் எல்லார் வீட்டுலயுமே டிவி இருக்க ஆரம்பிச்சது. படம் சரியா வரலேன்னா மாடிக்கு போய் ஆண்டெனா திருப்பணும். திருப்பறதுக்கு ஒருத்தர். சரியா வருதான்னு பாத்து கத்தறதுக்கு ஒருத்தர்.

லேண்ட் லைன் போன். அப்ளை பண்ணிட்டு வருஷக்கணக்கா காத்துருக்கணும். பக்கத்து வீடு எதிர் வீடுன்னு ஓடி ஓடி போய் கால் வந்திருக்குன்னு கூட்டிண்டு வரணும்.

அப்புறம் சேட்டலைட் டிவி. தூர்தர்ஷன் மட்டும் பாத்த காலம் போய், புதுசு புதுசா ப்ரோக்ராம் பாக்க ஆரம்பிச்சோம். சாயங்காலம் மட்டும் டீவின்னு இல்லாம நாள் பூரா ப்ரோக்ராம் வர ஆரம்பிச்சது. டேப் ரெக்கார்டர் வந்தது. வீடியோ டெக் வந்தது. அப்புறம் சிடி பிளேயர் வந்தது.

கணினி வகுப்பு அங்கங்கே ஆரம்பிச்சது. கணினின்னா என்னன்னே தெரியாம இருந்துட்டு திடுதிப்புனு இனிமே வேலை செய்யணும்னா அது தான் கத்துக்கணும்னு ஆயிடுத்து. ஏதோ எளிமையா State Board Syllabus படிச்சு மார்க் வாங்கி நல்ல காலேஜ்ல சேர்ந்து வேலைக்கு ட்ரை பண்ணலாம்னா, இது ஒரு திடீர் இம்சை. தட்டு தடுமாறி ஏதோ கத்துண்டு ஒரு வேலைக்கு போயி அங்கே training programmes attend பண்ணி இன்னும் கொஞ்சம் கத்துண்டு Basic, Cobol, Fortran, MS Dos, Multimate, Lotus – அப்படின்னு படிச்சா, திடீர்னு Microsoft Word ங்கறான் Excel ங்கறான் , HotMail ங்கிறான்.

வேற வழியில்லேன்னு அதையும் கொஞ்சம் கொஞ்சமா வேலையிலேயே கத்துண்டு பண்ண ஆரம்பிக்கும் போது வந்தது பேஜர். பல பேர் இடுப்புலயே கட்டிண்டு சுத்துவா. எங்கே போனாலும் இதுல பிடிச்சிடுனுவானுங்க. அதையும் பொறுத்துண்டு continue பண்ணா, அப்ப வந்தது இந்த யமன். செல் போன். செங்கல் மாதிரி இருந்ததை எடுத்துண்டு சுத்தணும். ஒழுங்கா திட்டம் பண்ணி வாழ்க்கை நடத்திண்டு இருந்த காலம் போய், ஒருத்தரை எப்ப கூப்பிடலாம் எப்ப கூப்பிடக்கூடாதுங்கற இங்கிதம் எல்லாம் தொலைஞ்சு போயி, நெனச்ச போதெல்லாம் கூப்பிட ஒரு வசதிங்கங்கற பேர்ல வந்த ஒரு மகா தொல்லை.

சரி , போன் தானே அப்படின்னு நெனைக்கறதுக்குள்ள ஸ்மார்ட் போன் அப்படின்னு இன்னுமொரு புது அவதாரம். இந்த பீடை வந்ததிலேருந்து, கேமரா போச்சு, கால்குலேட்டர் போச்சு, வாட்ச் போச்சு, காலண்டர் போச்சு, புக்ஸ் போச்சு, ரேடியோ போச்சு, கூடிய சீக்கிரம் டிவியும் போயிடும்.

ஏன் இப்ப சில Tiktok, Musically… appங்கிற பெயர்ல வெக்கம் போச்சு, மானம் போச்சு, சூடு போச்சு, சொரணை போச்சு, மரியாதை போச்சு.

சரி, சரி, நெறைய சௌகர்யமும் வந்ததுன்னு வெச்சுக்கோங்க, அப்புறம், ப்ளூ tooth ன்னாங்க, chrome cast ன்னாங்க, fire stick ன்னாங்க , ipad , notebook, kindle… இன்னும் என்னென்னமோ வந்துண்டே இருக்கு. அதை எல்லாமும் கத்துண்டோம்..

Whatsup, Facebook, Telegram, Instagram, Google Pay, Phone-pe, Internet banking, ATM, Online payments, Online bookings, Selfie, Status update, Story update, Ola, Uber, Swiggy எல்லாம் யூஸ் பண்ணலேன்னா மக்குன்னு சொல்லிடுவாங்களோன்னு எல்லாத்துலயும் நொழஞ்சு கத்துண்டோம்.

இவ்வளவு பரிணாம வளர்ச்சி தாண்டி இன்னிக்கும் ஸ்டெடியா நின்னு புதுசு புதுசா கத்துக்கற எங்களை யாரும் பாராட்ட மாட்டாங்க, ஏன்னா இப்போ இருக்கற பசங்களுக்கு இவ்வளவு adaptation நம்ப பண்ணிண்டு இருக்கோம்ங்கறதை நாம தெளிவா சொன்னதே இல்லையே..

ஒரு லைப்-ல எவ்வளவு பாரு.. இன்னும் மாற்றம் வரட்டும். எவ்வளவோ பாத்துட்டோம். இன்னும் கத்துக்க மாட்டோமா..

என்ன பாஸ் நான் சொல்றது.. இதுக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் ஆக கூடாது.

ஆனா நான் சொன்னதுல ஏதாவது தப்பான்னு சொல்லுங்க மக்களே. தகவல்:இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!