Home செய்திகள் குடியுரிமை திருத்த சட்டம் முதல்வர், பிரதமரை சந்தித்து தெளிவு பெற இஸ்லாமியர்களுக்கு சமக., தலைவர் சரத் குமார் அழைப்பு

குடியுரிமை திருத்த சட்டம் முதல்வர், பிரதமரை சந்தித்து தெளிவு பெற இஸ்லாமியர்களுக்கு சமக., தலைவர் சரத் குமார் அழைப்பு

by mohan

இராமநாதபுரத்தில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது: கொரானா வைரஸ் பரவல் மூலம் தமிழர் கலாசாரம் உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது. உலகத் தலைவர்கள் எல்லாம் கை குலுக்குவதை தவிர்த்து தமிழர்களின் பண்பாடு படி இரு கரம் கூப்பி வணக்கம் சொல்கின்றனர். குடியுரிமை சட்டம் பற்றி எவ்வளவு பேர் படித்திருப்பர் என்பது எனக்கு தெரியவில்லை. எந்த ஒரு இடத்திலும் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்படுவர் என நான் படித்த வரை குறிப்பிடவில்லை. அரசியலுக்காக வேறு ஏதும் குறை சொல்ல முடியாத நிலையில் இச்சட்டத்தை பற்றி தவறாக சித்தரித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டுதல் காரணமாகவே போராட்டங்கள் நடக்கிறது. அனைவருக்கும் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளது. குடியுரிமை திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டிருந்தாலும், சட்டம் பற்றிய சந்தேகங்களை தெளிவாக்க இஸ்லாமிய சகோதரர்களை ஒன்று சேர்த்து குழு அமையுங்கள். நானே அழைத்து செல்கிறேன் முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து சந்தேகங்களை தெளிவு படுத்தி கொள்வோம். சட்டத்தில் சொல்லாததை ஏன் சொல்ல வேண்டும், நாடு அமைதியாக இருக்க வேண்டும். கொரனா வைரஸால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சுற்றுபுற சூழல் சுத்தமாகவும், சுகாதார உணர்வும் இருந்தால் எந்த நோயும் நம்மை அண்டாது. மக்கள் கூட்டம் சேராத வகையில் பொது நிகழ்ச்சிகளை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்ததால் நல்லது. முதல்வர் பழனிச்சாமி அமைச்சராக இருந்த காலத்திலிருந்து எனக்கு தெரியும், பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே தமிழகத்தையும், இயக்கத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறார். நான் முதல்வராக வருவதை விட என் இயக்க சகோதரர்களை முதலமைச்சர் பதவியில் அமரவைக்கும் தகுதியை வளர்ப்பேன் என நான் கட்சி துவங்குமே போதே சொல்விட்டேன். சிலர் இன்னும் கட்சி ஆரம்பிக்காமலே சொல்லுகிறார்கள். அதையும் மனிதம் என பாராட்டுகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!