Home செய்திகள் இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு மேலும் புதிய ரயில்களை இயக்க வேண்டும்மக்களவையில் கே. நவாஸ் கனி எம்.பி. பேச்சு..!

இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு மேலும் புதிய ரயில்களை இயக்க வேண்டும்மக்களவையில் கே. நவாஸ் கனி எம்.பி. பேச்சு..!

by Askar

இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு மேலும் புதிய ரயில்களை இயக்க வேண்டும் மக்களவையில் கே. நவாஸ் கனி எம்.பி. பேச்சு..!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்களவை கட்சி கொறடாவும், இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி எம்.பி., நேற்று (12-03-2020) மக்களவையில் பேசியதாவது:-இந்த நாட்டின் முக்கிய போக்குவரத்து அங்கமாக மக்கள் பயன்படுத்தி வரக்கூடிய ரயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்ற கோரிக்கை யோடு எனது பேச்சை துவக்குகின்றேன். எனது தொகுதியான இராமநாத புரம் மாவட்டம் இராமேஸ் வரம் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியது. நம் நாட்டி லிருந்தும், வெளிநாடு களிலிருந் தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரீகர்கள் வருகை தருகின்றனர்.

2004 ஆண்டு வரை மீட்டர் கேஜ்ஜாக இயக்கக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டு ஃபிராட் கேஜ்ஜாக மாற்றப் பட்ட பிறகு முழுவதுமாக இயக்கப்பட வில்லை. உதாரணமாக இராமேஸ் வரத்திலிருந்து மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை சென்று வந்த ரயில்கள் கோயம்புத்தூருக்கு சென்று வந்த ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.

2004 ஆண்டு வரை மீட்டர் கேஜ்ஜில் இயக்கக்கப்பட்டு வந்த அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இராமநாதபுரம் மாவட்டம் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம் அருகிலே தங்கச்சி மடத்தில் இயங்கி வந்த ரயில் நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் வெகு நாட்களாக கேட்டு வருகின்றனர். இராமேஸ்வரத்திலிருந்து வரக்கூடிய ரயில்கள் தங்கச்சி மடத்தில் நிற்கக்கூடிய வகையில் அந்த ரயில் நிலையத்தை துவக்கிஅந்த பகுதியில் இருக்கக்கூடிய வியாபார மக்களுக்கும், பொதுமக் களுக்கும் பயன்பெறக்கூடிய வகையில் வழி காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு 2 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டமாக இராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது. சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தக் கூடியவர் களாகவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இருக்கின்றனர். அவர்களை வழியனுப்பக்கூடிய உறவினர் களும் பயன்படுத்துவதற்கு வசதியாக மேலும் புதிய ரயில்களை சென்னைக்கு இயக்க வேண்டும். குறிப்பாக பகல்நேர ரயில்களை சென்னைக்கு இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என் தொகுதிக்குட்பட்ட அறந் தாங்கி பகுதியில் கேட் கீப்பர்கள் பணிய மர்த்தப் படாமல் வெகுநாட்களாக முறையாக ரயில்கள் இயக்கப் படாமல் இருக்கிறது. எனவே, அந்த பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காரைக்குடி – அறந்தாங்கி சென்னைக்கு மீண்டும் ரயில்கள் இயக்க வேண்டும்.

காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக மயிலாடுதுறைக்கு மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும். ஏற்கனவே மீட்டர் கே.ஜிலே இயங்கிக்கொண்டிருந்த ரயில்களை அறந்தாங்கி வழியாக மீண்டும் இயக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி வந்த கம்பன் விரைவு ரயிலை மீண்டும் துவக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அறந்தாங்கி வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். அந்த ஊரிலே அதிகமான வியாரிகள் சென்னையோடு வணிகத் தொடர்பு டையவர்களாக இருக்கி றார்கள். அறந் தாங்கி யில் அதிகமான வணிகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யக் கூடிய பகுதியாக இருக்கிறது. ஏற்கனவே இயங்கி வந்த இரண்டு சரக்கு ரயில்களையும் அறந்தாங்கி பகுதிக்கு மீண்டும் இயக்க வேண்டும்.

காரைக்குடி – கன்னியாகுமரி வரையிலான அந்த ரயில் பாதையை ரத்து செய்திருக்கிறார்கள். புதிய திட்டத்தை காரைக்குடி யிலிருந்து துவக்கி ராமநாதபுரம் ஏர்வாடி, கீழக் கரை, சாயல்குடி, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையாக ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த பணிகள் நிறுத்தப் பட்டு அந்த திட்டம் கைவிடப் பட்டிருக்கிறது. மீண்டும் அந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்து மீண்டும் துவக்கினால் அந்த பகுதியிலுள்ள மக்களுக்கு ரயில் போக்குவரத்து கிடைக்கும். இராமநாதபுரம் ரயில் நிலையம் பலபுனித தலங்க ளுக்கு வந்து செல்லக்கூடிய அதிமான பயணிகளை கையாளக் கூடியதாக இருக்கிறது. எனவே, தலைநகரில் இருக்கக்கூடிய ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி, மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் மேம்படுத்தித்தர வேண்டி கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!