Home செய்திகள் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா

by mohan

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பெட்ரோலியத் துறையின் சார்பில் நடைபெற்ற ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது .ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .விழாவில் திருச்சி சுங்க வரி துறையின் துணை ஆணையாளர் ஆர் . பாலசுப்பிரமணியன் ஐ.ஆர்.எஸ். பங்கேற்று ஓவிய போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில் , குறிக்கோளை அனைத்து மாணவர்களும் இளம் வயதில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நாம் வெற்றி பெற்றவர்களாக ஒரு காலத்தில் மாறமுடியும். நான் இளம் வயதில் குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டதால் மிகப் பெரிய பதவிக்கு வர வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதால் இன்று உங்கள் முன்பாக திருச்சி சுங்க வரி துறையின் துணை ஆணையாளராக நின்று பேசிக்கொண்டு உள்ளேன். நீங்களும் அதுபோன்ற வாழ்க்கையில் இளம் வயதில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து நன்றாகப் படித்து மிகப் பெரிய பதவிகளுக்கு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களால் நிச்சயமாக முடியும் என்று பேசினார்.மத்திய அரசின் பெட்ரோலிய துறையின் சார்பில் சுற்றுப்புறச் சூழலை வளமாக வைத்துக் கொள்ளும் வகையில் எண்ணெய் வளங்களை நல்ல முறையில் பயன்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆங்கிலக் கட்டுரையில் ஜோயல் ரொனால்டோ, தமிழ் கட்டுரையில் கீர்த்தியும், ஓவிய போட்டியில் பாலமுருகன், வெங்கட்ராமன், அஜய் பிரகாஷ், ஐஸ்வரியா ஆகியோரும் சான்றிதழ்களை பெற்றனர் . நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!