Home செய்திகள் பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபுதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது..

பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபுதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது..

by Askar

பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபுதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது..

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபுதூர் பொன்மாரியம்மன் கோவில் திரு ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம் இந்தாண்டு கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவானது தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறுகின்றன முக்கிய நாளான  இன்று வாழைத்தோட்டம் , கடமடை, கோடியூர் , பேளாரஅள்ளி பாலக்கோடு உள்ளிட்ட18கிராம மக்கள் மற்றும் வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து  1 இலட்சத்திற்க்கு அதிகமான பக்தர்கள்கள் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், லாரி, டெம்போ, மினிலாரி, ஆகயா விமானத்தில் தொங்கியப்படியும், பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும் ஆயிரக்கணக்காள பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் கிராம மக்கள் திரௌபதியம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு தட்டு மற்றும் பூஜை பொருட்கள் என பக்தர்கள் சுமார் 3கி.மீ தூரத்திற்க்கு நடந்து சென்று ஸ்ரீ புதூர் பொன்மாரியம்மன் கோவிலை சென்று அடைந்து சாமி தரிசனம் செய்தனர் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு தொடாந்து பல்வேறு இடங்களில் அன்னதானம் , கூழ் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் 100க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!