Home செய்திகள் இந்தியா எங்கள்தேசம்!இஸ்லாம் எங்கள்சுவாசம்!

இந்தியா எங்கள்தேசம்!இஸ்லாம் எங்கள்சுவாசம்!

by Askar

தொடர்ச்சி….

பகுதி-4

இந்து ராஷ்டிரம் என்ற தங்களின் கனவுகளை நிறைவேற்ற அறிவுப்பூர்வமாக திட்டமிட்டார்கள். ஏராளமான கல்விநிலையங்களை ஆரம்பித்தார்கள். வித்யாபாரதி என்பது அவர்களின் கல்விநிலையங்களின் பெயர்கள்.

இந்தியாவில்12000 பள்ளிகளை நிறுவி இருக்கிறார்கள். அதில் 32 லட்சம் மாணவர்கள் பயில்கிறார்கள். இதன் பதிவுஅலுவலகம் லக்னோவிலும், செயல் அலுவலகம் டெல்லியிலும் செயல்படுகிறது. ஏராளமான கல்லூரிகள், உயர் தொழில்நுட்ப கல்லூரிகள் என இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கல்வி வலைப்பின்னலை கையில் வைத்து இயங்குகிற இந்த அமைப்பு கல்வியிலேய காவியை கலந்துவிட்டது. அதிலிருந்து வெளியில் வரும் மாணவர்களுக்கு உன்மை வரலாறுகளை சொல்லப்போவது யார்?

இராணுவப் பள்ளியையும் ஆரம்பித்து அங்கு பள்ளிப்படிப்போடு இராணுவக் கல்வியையும் கற்றுக்கொடுத்து இராணுவத்தில் அதிகாரிகளாக ஆவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்குகின்றனர். அவர்கள் படித்து தகுதியானவர்களாக ஆகும்போது இராணுவத்தில் மிகப்பெரிய பதவிகளை அடைந்துவிட முடியும்.

அதுபோல அதிகாரங்களை கட்டமைக்கிற சிவில்சர்வீஸ் அகடாமிகளை நடத்துகிறார்கள். அதில் தேர்ச்சிபெறுவதற்கு மிகச்சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கி ஏராளமான IAS,IPS,IFS களை உருவாக்கி அதிகார வளையத்திற்குள் எளிதாக நுழைந்துவிடும் வழியை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களின் கனவு எவ்வளவு நுட்பமானது என்பது ஆச்சரியமானது. அவர்களின் ஒருசாரார் பிறந்ததிலிருந்து திட்டமிட்டு அவர்களின் இலக்குகளுக்கான படிப்புகளை தேர்வு செய்து வெளிநாடுகளில் சென்று உயர்ந்த பதவிகளை அடைந்திருக்கிறார்கள்.

கத்தாரின் ஒரு பெரியவங்கியின் உயர்பொறுப்பிலுள்ள பிராமணர் அங்கிருந்து உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்லாமிய வங்கிகளே சிறந்தது என்று பேசுகிறார். அவர்களின் மற்றொரு குழுவினர் திருமணங்களை செய்து கொள்ளாமல் மடங்களில் தங்கியும், தங்களின் இலக்கை அடைய எல்லா உத்திகளையும் பயன்படுத்தி இந்தியாவின் அதிகார இடஙகளில் பரவியுள்ளனர்.

இந்தியாவின் மிகசசிறநத பொருளாதார ஆளுமைகளாக சுப்பிரமணியசுவாமியும் குருமூர்த்தியும் இருப்பது நாம் சிந்திக்கவேண்டிய செய்திகள். அவர்களின் சிந்தாத்தில் அவர்களின் பிடிப்பும், அவர்களின் செயல்பாடுகளும் நமக்கான பாடங்கள். இதுபோன்ற துல்லியமான அறிவுத் திட்டமிடல்களுடன் இராணுவத்தில், அரசாங்கத்தின் உயர்ந்த பதவிகளில், ஊடகங்களில், நீதிமன்றங்களில் அவர்களின் எண்ணிக்கையும் ஆளுமையும் அதிகரிக்கிறது.

அவர்களை பார்த்து எரிச்சல் படுவதிலும் பொறாமை படுவதிலும் எதுவும் சாதிக்க முடியாது….

இறைவன் நாடினால் தொடர்ந்து பேசுவோம…!

கப்ளிசேட்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!