
மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றத்தை அடுத்த திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக அரசு மதுபான கடை ஒன்று திறக்க உள்ளதாக இருந்தது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அந்த புதிதாக திறக்க இருந்த அப்பகுதி மக்கள் அரசு மதுபான கடை முன் முற்றுகையிட்டனர். தகவலறிந்த திருநகர் காவல் துறை ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை ஏற்று தற்காலிகமாக கடை மூடப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளார்கள். இதனால் திருநகர் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்