இராமநாதபுரத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

இராமநாதபுரத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்து, புகைப்படங்களை பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியில் பிரதமர் பங்கேற்ற அரசு விழாக்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம், பெண்களின் திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், மாணவ, மாணவியருக்கான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு மக்கள் நலத்
திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழக முதல்வரின் சீர்மிகு குடிமராமத்து திட்டம், 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்,
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், ரூ.1,000 உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு திட்டம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், சட்ட சபையில் தமிழக முதல்வர் ஆற்றிய உரை, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியது உட்பட பல்வேறு புகைப்படங்கள், தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கிய அரசு விழாக்களின் புகைப்படங்கள், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் புகைப்படங்கள் மக்கள் பார்வைக்கு இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் சார் ஆட்சியர் முனைவர் என்.ஓ.சுகபுத்ரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ம.கயிலைச்செல்வம் (செய்தி), எம்.கேசவமூர்த்தி (விளம்பரம்) உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..