திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது,6 கிலோ கஞ்சா பறிமுதல்…

திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது,6 கிலோ கஞ்சா பறிமுதல்…

திருவண்ணாமலை நகர பழையகார் கானா தெரு கோவிந்தசாமியின் மகன் பழனி என்பவரது மாடிவீட்டில் 2.5 கிலோ கஞ்சா பிடிபட்டது.

இதில் திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்த மாரிக்கண்ணு மற்றும் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் தீபிகா தலைமறைவாகியுள்ளார்.

மேலும் திருவண்ணாமலை நகர சமூகம் காலனி பகுதியில் உள்ள வீட்டில் 1.6 கிலோ கிராம் கஞ்சா பிடிபட்டது.

இதில் மங்கை மற்றும் அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் திருவண்ணாமலை நகர வண்டி மேட்டுத்தெரு நகராட்சிக் கழிப்பிடம் அருகில் போதை பொருள் வைத்திருந்த லட்சுமி என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் திருவண்ணாமலை நகரம் சமுத்திரம் காலனி பகுதியைச் சேர்ந்த சேதுபதி தலைமறைவாகியுள்ளார்.

கல் நகர் சுடுகாட்டு பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை நகர காவல்துறையினர் கஞ்சா மற்றும் போதை பொருட்களை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிரடியாக கிலோ கணக்கில் கஞ்சா பொருட்களையும், குட்கா பொருட்களையும் , போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களையும் கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..