தண்ணீர் தேடி அலையும் உயிரினங்கள்:- தாகம் தீர்க்குமா நிர்வாகம்?

திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில், உணவை தேடி சாலையோரம் மயில் கூட்டம் சுற்றி வருகின்றன. திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் மான், மயில், சிங்கவால் குரங்கு, கரடி, நரி, உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன. தற்போது கோடைக்கு முன்பே வறட்சி தொடங்கி உள்ளதால், வனப்பகுதியில் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றின. மேலும், உணவு கிடைக்காத நிலை உள்ளது. இதனால், மான் மற்றும் மயில்கள், சாலையோரங்களில் நீர் மற்றும் உணவை தேடி வர துவங்கி உள்ளன. இதனால், சாலையில் வரும் வாகனங்களில் அவை சிக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, வனப்பகுதிக்குள் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில், வனத்துறையினர் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image