நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக குடிநீருக்காக 5 லட்சம் மதிப்பில் பணி துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மகளியர் கலைக்கல்லூரி குளத்துபட்டி பிரிவுயில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் தற்போது சுமார் 2400 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. உடனடியாக கல்லூரியின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டுமென்று நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் பேராசிரியர்கள் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ரெஜினா நாயகம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் யாகப்பன், நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சேகர் ஆகியோரிடம் நேரில் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.இந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்று நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக போர்வெல் அமைத்தபோது அதிகளவில் தண்ணீர் கிடைப்பதால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் மலர் கூறியதாவது: கல்லூரியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்தது அதனை போக்க வேண்டுமென்று ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களிடம் கோரிக்கை வைத்தோம் இதனை ஏற்று உடனடியாக அமைத்து கொடுத்துள்ளார்கள். அதற்காக கல்லூரி மாணவிகளின் சார்பாக மகிழ்ச்சியும் , நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.அப்போது உடன் கல்லூரிப் பேராசிரியர்கள் சின்னச்சாமி, ராஜசேகர் உள்பட பலர் இருந்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர்.ம. ராஜா

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..