காவல் உதவி ஆய்வாளர் சிந்தனையும் ஓர் சமுதாய சிந்தனைதான்…

மதுரை மாநகர் B5 தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் .ஜான்  ரோந்து பணியில் இருந்த போது தெற்குவாசல் பகுதியில் 70 வயது மூதாட்டியை சந்தித்தபோது அம்மூதாட்டி தான் ஒரு அநாதை என்றும் தனக்கு அதிகமான பசி இருப்பதாகவும் கூறி கண்கலங்கியுள்ளார். உடனடியாக உதவி ஆய்வாளர் அவருக்கு உணவு வாங்கி கொடுத்து அவர் வாழ்நாள் முழுவதும் உணவிற்கு கஷ்டப்படாமல் இருக்க தன் சொந்த முயற்சியில் கொடைரோட்டில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் ஒப்படைத்தார். காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  காவல் உதவி ஆய்வாளரை பாராட்டினார்.காவல் உதவி ஆய்வாளர்  ஜான் *பிறருக்கு கொடுத்து
உதவுதல்..தன் நலனில் அக்கறை காட்டாமல் பிறர் நலனில் அக்கறை காட்டுதல்..இல்லாதவர்களுக்கு தன் சொந்த செலவில் உதவுதல்…உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தல்…வயதானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களது வறுமையை போக்குதல்..போன்ற நற்செயல்களை மதுரை மாநகர மக்களுக்காக தொடர்ந்து சேவை ஆற்றி வருகின்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..